அடுக்கு மொழியில் அழகாய் பேசி
கிடுக்கு பிடியாய் பார்வை வீசி
காட்ட தெரியாது காதலை எனக்கு !
இயல்பாய் இருப்பதே இஷ்டம் எனக்கு
இருந்தும் மாறினேன் உனக்கே உனக்கு ...
காட்டி விட்டாய் எனக்கே என்னை
கவிதை வடித்தேன் உயிரில் உன்னை !
நானும் ஆனேன் கவிஞனாய் இன்று
சாதித்து விட்டாய் எனையும் வென்று...
துரும்பை போல துச்சமாய் கிடந்தேன்
தூக்கி வைத்தாய் உச்சமாய் உணர்ந்தேன் !
இறுதி வரை இருப்பேனோ அறியேன்
மண்ணில் காதல் இருக்கும்வரை மரியேன் .....
0 comments:
Post a Comment