சாவு நோவு சரிகட்டி
அரிசி பருப்பு வரி கட்டி
வெந்தும் வேகாம அடுப்பெரிச்சு
காலத்தா ஓட்டுறான் அன்னாடங்காச்சி !
அடைச்ச கடன் போக
அஞ்சு பத்து மிச்சப் படுத்தி
அரசாங்க வங்கியில அவன் போட்டா !
வட்டியில்லா கடனுன்னும்
வரி சலுகையின்னும்
ஏதேதோ பேரு வச்சு !
அம்பானிக்கும் அதானிக்கும்
அள்ளிக் கொடுப்பான் -- அவன்
அப்பன் வீட்டு சொத்தாட்டம்.....
மூலதனம் உன் காசு
உற்பத்தி உன் உழைப்பு
லாபம் மட்டும் மொதலாளிக்கு !
இது தான்டா பொருளாதாரம்
இவ்வளவு தான்டா அவன்தந்திரம்....
உனக்கு புரியாதுன்னு புறந்தள்ளி
அந்நிய மொழியில் மந்திரஞ்சொல்லி
ஒதுக்கிவச்சான் அன்னிக்கு !
அதே வர்ணம் அதே வர்க்கம்
ஏய்க்க வருது கொண்டயமாத்தி
முழிச்சுக்கோடா இன்னிக்கு.....!
0 comments:
Post a Comment