விஜயகாநத் உடன் மக்கள் நல கூட்டணி செல்வதை பல நடுநிலையாளர்கள் விரும்பவில்லை என்பதாக தெரிகிறது
அரசியல்னா கிலோ என்னவிலை என்று கேட்பவர்தான் விஜயகாந்த்
குடிகாரர்தான் ஜனநாயகம் பற்றிய அரிச்சுவடே அறியாதவர்தான்.
ஆனால் அவருக்கு பின்னால் ஒரு கணிசமான அறியாமை மக்கள் கூட்டம் இருப்பதை நாம் ஒதுக்கிவிட முடியாது. அந்த மக்கள் திரள் நம்முடைய தவறான கையாளுதலால் மீண்டும் சில அயோக்கியர்களை அரியணைக்கு ஏற்றிவிட்டு விடும் .
அவர் ஒன்றும் விஞ்ஞான திருடரும் அல்ல மோசமான சர்வாதிகார பாப்பாத்தியும் அல்ல . அவரை நோக்கி பெரிதாக பயம் கொள்ள .தவிர இன்னொரு யதார்த்தம் என்னவென்றால் இந்த தேர்தலில் அப்படி ஒன்றும் மநகூ தனிப்பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைத்திட போவதில்லை .
இப்போது நம்முன் இருக்கும் சூழல்
என்ன ?
விஜயகாந்த் திமுக பக்கம் சென்றிருந்தால் மீண்டும் கலைஞர் முதல்வராவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கும் .தமிழ்நாடு இன்னும் ஒரு இருபத்தைந்தாண்டு பின்னோக்கி செல்ல வேண்டியதிருக்கும் மாற்றத்திற்கு.
விஜயகாந்த் தனியாக நிற்பதை நாம் வரவேற்கதான் செய்தோம்.ஆனால் மீண்டும் அங்கே கூட்டணி என்று முடிவு செய்துவிட்ட பின் நம்மிடம் எஞ்சியிருக்கும் வாய்ப்புதான் என்ன !
பாஜகவோடு சென்றிருந்தால் அதனால் தற்போதைய நிலைமையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஆனால் திமுக வோடு சென்றால் எல்லாமே கெட்டுவிடும் . அது திமுகவோடு செல்வதை தடுக்க வேண்டும் என்றால் அதனுடைய தெரிவில் இருக்கின்ற நம்முடன் தான் அது சேர முடியும் .நாம் மறுத்தால் இதயத்தில் மட்டுமல்ல ஆட்சியிலும் இடம் தர கட்டுமரம் தயாராக காத்திருக்கிறது.
இது முழுக்க முழுக்க தமிழக அரசியல் சூழலை சரியாக கணித்து மாற்றத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு முடிவு . இது திமுக என்ற கட்சியை காணாமல் போக செய்யும் . அதிமுகவை பொறுத்தவரை அது ஜெயாவோடு கலைந்துவிடும் என்றாலும் அதை ஓரங்கட்டுவது ஒன்றும் பெரிய கடினமமான பணி அல்ல . அங்கு இருப்பதெல்லாம் அரசியல் அறிவற்ற ஜால்ராக்கள் மட்டும் தான் . இந்த சூழலில் மநகூ ஓட்டு சதவீத அதிகரிப்பின் மூலம் தமிழக மக்களின் மனதில் வேறொரு சரியான மாற்று இருப்பதை பதிய வைக்க முடியும்
இரண்டு மோசமான கட்சிகளை ஒருசேர ஓரங்கட்ட முடியாத சூழலில் ஒரு கட்சியை ஒழிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பை தவறவிட்டு விடக் கூடாது .மக்கள் நல கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெருவதோ வாக்கு வங்கியை அதிகரிப்பதோ தமிழக அரசியலை நல்லதொரு முன்னேற்ற சூழலுக்கு நகர்த்தி செல்ல உதவும்...
0 comments:
Post a Comment