Latest News

இந்துக்கு தாலி...
இஸ்லாத்துக்கு பர்தா...
காலத்தின் கட்டாயமா ?
கயவர்களின் கட்டாயமா ?
விரும்பி ஏற்றாலும்
விரும்பாமல் ஏற்றாலும்
சுதந்திரமாய் முடிவை நீயே எடு.....!

மதம் என்றும் மாச்சர்யம் என்றும்
மானமே அதில் தான் என்றும்
மாயை பேசி திரியும்
மண்ணாங்கட்டி பிறப்புகளின்
மடத்தனமான உளறலை
மண்டையில் ஒருபோதும்
ஏற்றிக் கொள்ளாதே பெண்ணே......!

அடிமைகள் விற்பதில்
அடையாளம் தறிப்பதில்
ஆணுக்கு பெண் நிகரில்லை
எனும் ஆதிக்க சிந்தனையில்

மாற்று மதம் போலி
மாற்றான் உணவு தீட்டு
மாற்றான் உறவு ஹராம்
மாற்றானோடு காதல் பாவம்

பகுத்தறிவு எதிர்த்து
பெளதீக விதிமீறி
அறிவியலுக்கு அப்பால் மட்டுமே
வைத்திடும் நம்பிக்கை

எதிலேனும் உண்டா வேறுபாடு
பார்ப்பனீயத்திற்கும்
இஸ்லாத்திற்கும்.....

0 comments:

Post a Comment