"உழைத்தால் உயரலாம் என்பது ஏமாற்று;
உழைப்புச் சுரண்டலே ஏற்றத்தாழ்வின் ஊற்று "
பொதுவா வாழ்க்கையில ஜெயிச்சு, நிறைய பணம் சம்பாதிச்சு உயரமான இடத்துல இருக்குற சில அப்பரசண்டுகள் அடுத்தவனுக்கு குடுக்கிற அட்வைஸ் இது தான்...
"நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்துல பொறந்தவன். சாப்பாட்டுக்கே கஷ்டம். டீ கடைல வேலை பார்த்தேன்.சுண்டல் வித்தேன். வேலைக்கு நாயா அலைஞ்சேன்.......என்னோட கடின உழைப்பால இன்னைக்கு இந்த நிலையில இருக்கிறேன்...."
இவனுங்களுக்கு நம்மலோட கேள்விகள் சில
நீ ஏழ்மையில இருந்த ....உழைச்சு முன்னுக்கு வந்திட்ட ....ஆனா என்னைக்காவது அந்த ஏழ்மைக்கு காரணம் என்ன.. அத எப்படி மாத்துறதுனா யோசித்தது உண்டா...?
கடினமா உழைச்சா முன்னுக்கு வந்திரலாம்னு யாரு சொன்னது......அப்படி நீ என்ன கடினமான வேலை செஞ்சுட்ட.. எங்க ஊரு குப்பனும் ,சுப்பனும் காலைல போனா ஓய்வே இல்லாம உழைச்சிட்டு ராத்திரி தான் வாராங்க ....ஆனா இன்னும் அந்த அளுக்கு லுங்கியும், கிழிஞ்ச பனியனும் மட்டும் தான் அவன் சொத்து....
இதுல பட்டம் வேற ..."உழைப்பால் உயர்ந்த உத்தமரேனு." ..ஒன்னு நீ அடுத்தவன் உழைப்ப சுரண்டி இந்த நிலைக்கு வந்திருக்கனும் (மறைமுக திருட்டு) இல்ல நேரடியாவே திருடிருக்கனும்...
இவனுங்கல தூக்கி வச்சி கொண்டாடுகிற, உழைப்புக்கு உதாரணமா சொல்கிற சில முதலாளித்துவ, விபச்சார ஊடகங்களோட முக்கியமான நோக்கமே மக்கள் கிட்ட இருந்து உண்மைய மறைக்கிறது தான்...
ஆகவே இளைஞர்களே .....!
முதலாளியின் உண்மையான மூலதனம் திருடி சேர்த்ததே...இதை சொல்வது மட்டுமல்ல அதற்கான தீர்வையும் சொல்வது தான் கம்யூனிஸம்.......அந்த பாதைக்கு திரும்புவோம்..நம் வாழ்வை நாமே மாற்றுவோம்..........
0 comments:
Post a Comment