இட ஒதுக்கீடு சரியா? தவறா ?
எந்த ஒரு விஷயத்தையும் அதற்கான சூழ்நிலைக்காரணிகள் ஆராயமல் பார்க்கப்படும் போது அதில் தெளிவான முடிவை நம்மால் எட்ட முடியாது...சரி நீங்க இட ஒதுக்கீட்டையே எதிர்க்குறீங்களா ? அல்லது இன்றைய சூழலில் மட்டும் அதை எதிர்க்கிறீர்களா..?...
ஒட்டு மொத்த இட ஒதுக்கீடே தேவை இல்லை என்பவர்களுக்கு .... ஆதிக்க சமூகத்தில் இருப்பவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை.அவன் எதிர்ப்பதில் ஆச்சரியமும் இல்லை....அந்தகால கல்வி முறை என்பது குருகுல கல்விதான் அங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கே இடமில்லை என்றால் அதற்கும் கீழ் உள்ளவனை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.இப்படிப்பட்ட சமூக சூழலில் இருந்து வந்த சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகளும், ஆதிக்க சமூகத்தில் இருந்து வரும் பிள்ளைகளும் ஒருசேர போட்டியிடும் போது அது சமமான போட்டியாக இருக்க முடியுமா..? படிப்பிலிருந்து வேலை பெறுவது வரை முதலாமவன் இரண்டாமவனிடத்தில் தோற்றுக் கொண்டே இருப்பான்...
அப்போது தேவைப்பட்டது இப்போதும் என்ன அவசியம் அதற்கு என்பவர்களுக்கு...
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த உன் குடும்பத்தின் முதலாவது பட்டதாரி எத்தனையாவது தலைமுறையில் தோன்றினான் ?. உன்னுடைய பொருளாதார பிண்ணனியை நீ அறிவாய்.உனக்கும் கீழ் உள்ளவனை அறிவாயா?..இன்னும் மேல்நிலைப்பள்ளியையே எட்டமுடியாத பிள்ளைகளை நீ கண்டதில்லையா ?....அது அவரின் படிப்பறிவு சார்ந்தது என்கிறாயா...! படிப்பிற்கும் குடும்ப பொருளாதார, வாழ்க்கை சூழலுக்கும் சம்மந்தம் இல்லையா.?...இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்துவந்த இந்த அவலத்தை 20 ஆண்டுகளில் போதும் இனி நிருத்திக் கொள்ளுங்கள் என்பது எந்த வகையான நியாயமோ....! அதுவும் இதுவரை முதலாளித்துவ சுரண்டல் ஆட்சியை மட்டுமே கொண்ட அரசை வைத்துக் கொண்டு இதை கேட்பது ...
அறிவு என்பது சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டு பின் முடிவு செய்யப்பட வேண்டியது...வாய்ப்பே அளிக்கப்படாத சமூகத்திடம் அதை எதிர்பார்ப்பது எந்த மாதிரி அறிவுடமையோ....
இந்த எழவெடுத்த இட ஒதுக்கீடு கருமமெல்லாம் அரசு வேலைக்கு போட்டி போட தானே..பாலாபோன தனியார்கிட்ட அதுவும் கிடையாது...
எல்லோருக்கும் வேலை கொடு. வாழ்க்கை உத்திவாதம் கொடு. என்று அரசிடம் கேட்பதை விடுத்து அரசை எதிர்த்து போராடுவதை விடுத்து உன் கோபத்தையும் ,வெறுப்பையும், இயலாமையையும் இல்லாதவனிடம் காட்டுவது ஏனோ.....
0 comments:
Post a Comment