பெண்ணுக்கான ஆடை சுதந்திரத்தை பெண்தான் முடிவு செய்ய வேண்டும் என்றதும் அடுத்த கணமே அடிப்படை வாதிகளிடமிருந்து நம்மை நோக்கி வரும் கேள்வி....
"சினிமாவில் வருவது போன்று உங்கள் வீட்டு பெண்கள் உடை அணிந்தால் கண்டிக்க மாட்டீர்களா ?".....
அதாவது ஒரு பெண்ணுக்கு சுயமாக முடிவு செய்யும் தகுதி இல்லை என்கிற மனோபாவத்தில் இருந்து இந்த எண்ணம் வருகிறது.........
கருப்பு நிறத்தை வெறுத்து சிவப்பு நிறம்தான் மேலானது, அழகானது என்கிற எண்ணம் மக்களிடம் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது .....
ஆனால் அதே எண்ணம் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களிடம் இருப்பது தவறானது மட்டுமல்ல ஆபத்தானது.....
அதன் விளைவுதான் முதலாளித்துவ லாபவெறியில் மக்களை சிக்கவைக்க, சிவப்பானதும் திருமணம் நடப்பது , வேலை கிடைப்பது போன்ற விளம்பரங்களை அனுமதிப்பது........
தன் வீட்டு பெண்களை வக்கிரபுத்தி கொண்ட ஆணாதிக்க சக்திகளிடம் இருந்து காக்க சமூகத்திற்கு தகுந்தாற்போல் ஆடை அணிய செய்யும் மனோபாவம் மக்களிடம் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது........
ஆனால் அதே மனோபாவம்தான் கடவுளிடமும் இருப்பதாக சொல்வது ஆபத்தின் உச்சம் மட்டுமல்ல, அசிங்கத்தின் உச்சம்......
அதன் விளைவுதான் சமூக மாற்றத்திற்கான தீர்வை சொல்லாமல் ,தண்டனையை கூட வக்கிரத்திற்கு கொடுக்காமல் பாதிக்கப்படும் பெண்ணுக்கே கொடுப்பது ........
0 comments:
Post a Comment