Latest News

இந்து மதத்தை மட்டும் எதிர்க்கிறீர்கள் மூடத்தனம் என்கிறீர்கள் இது மற்ற மதத்தில் இல்லையா ? அவர்களை பற்றி ஏன் பேசுவதில்லை ?

இந்த கேள்வி பல நாளாக பலபேர் கேட்டு கொண்டே இருக்கும் கேள்வி தான்

2011 கணக்கின்படி இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 14 சதமாகவும் , கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதமாகவும்  உள்ளது

ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிற கிறிஸ்தவ மதத்தையும் அரேபிய நாடுகளில் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிற இஸ்லாமிய மதத்தையும் பற்றி இங்கு ஏன் விமர்சிக்க வேண்டும்

இங்கு மனிதர்களை பிற்படுத்தி , தாழ்த்தி சாதி ரீதியாக அவர்களை பிரித்து ஆதிக்கம் செலுத்துவது  இந்து மதம்தான்.அதிலும் குறிப்பாக வெறும் 3 சதம் மட்டுமே உள்ள ஒரு கூட்டத்திற்காக உருவாக்கப்பட்ட மதம் தான் இந்த இந்து மதம் .இதில் நாமெல்லாம் சூத்திரர்கள் என்ற வர்ணத்தில் தான் வருகிறோம்.சூத்திரன் என்பதற்கு ஒரு ஏழு காரணி சொல்லப்படுகிறது .அதில் குறிப்பாக சூத்திரன் என்பவன் விபச்சாரி மகன் என்றும் வருகிறது .இந்த மதத்தில் சேர்க்கப்பட்ட எந்த ஒரு மானமுள்ளவனும் இதை எதிர்க்காமல் என்ன செய்வான்

பெரும்பாலும் முகம் தெரியாத   நபர்களோடு நடத்தும் விவாதங்களில்  நான் அளிக்கும் பதில் இதுதான்.

ஆனால் இது மட்டுமே போதாது. ஒரு சரியான மார்க்சியவாதியாக இவர்களை நல்ல சித்தாந்தத்தின் பக்கம் வென்றெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வாதத்தில் வெற்றி கொள்வதை விட தெளிவு படுத்துவதே சிறந்தது என்று எண்ணுகிறேன் . அதே நேரத்தில் சில உளவியல் உண்மைகளையும் இங்கு போட்டுடைக்க வேண்டியதிருக்கிறது.
இது மூடத்தனத்திற்கு எதிரான கேள்வியாக மட்டும் எல்லா நேரத்திலும் இருந்து விடுவதில்லை.தங்களுடைய மதம் மூடத்தனமானதாகவே இருந்தாலும்  மற்றொரு மதத்தின் பக்கம் தான் அறிந்தவர்களும் தன்னை சார்ந்தவர்களும் செல்வதை யாரும் விரும்புவதில்லை. அதனால் ஏற்படுகிற ஆற்றாமையாகவே இந்த கேள்வி உதிக்கிறது .

உண்மையில் இந்த எண்ணம் எல்லா மதத்தாரிடமும் எல்லா மனிதர்களிடமும் இருக்கத்தான் செய்கிறது மதம் பற்றிய வரலாறும் அதற்கு பின்னால் இருக்கக் கூடிய அரசியலும் அறியாத வரை.கம்யூனிஸ்ட்கள் கிறிஸ்தவ நாடுகளில் இந்து மத பித்தலாட்டங்களை தோலுரிக்க வேண்டிய அவசியமில்லை அங்கு கிறிஸ்தவத்தின் போலித்தனம்தான் கிழிக்கப்படுகிறது.அரபு நாடுகளில் கிறிஸ்தவ கொடுமைகள் பற்றி பேசுவதில்லை அங்கு இஸ்லாத்தின் முட்டாள்தனங்களும் கொடூரமும் தான் அம்பலப்படுத்தப்படுகிறது.அது போல இந்தியாவிலும் இந்து மதத்தின் டவுசர்  கழட்டப்படுகிறது...

பொதுவாக மதத்தை எதிர்க்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணமே இல்லை.அது நமது வேலையும் அல்ல. ஆனால் இந்த படுமோசமான முதலாளித்துவ சமூகத்தை இறுத்தி வைப்பதில் அதற்கொரு பெரும் பங்குண்டு.அது பெரிய தடையாக எப்போதும் குறுக்கே நிற்கிறது .சமூக விதியை எல்லாம் தலைவிதி என்று சொல்லி அது நம்மை ஏய்க்க பார்க்கிறது.மூவாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் நம்மை ஆண்டு வருவதே அதற்கு சாட்சி.
நமக்கு எந்த மதத்தின் மீதும் கணிவோ கரிசணமோ கிடையாது . எல்லா மதமும் ஒன்றுதான் மனிதனின் சிந்தனையை மழுங்கடிப்பதில்

அதிலும் கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் மதத்தை வைத்து கடவுளை மறுப்பவர்கள் அல்லர். நாத்திகர்களின் கடவுள் மறுப்பிற்கும் மார்க்சியத்திற்கும் பெரிய வேறுபாடு உண்டு . கடவுளை மறுக்க எங்களுக்கு எந்த மதமும் தேவையில்லை அறிவியல் கொண்டு உரசியே  கடவுள் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்

0 comments:

Post a Comment