பொதுவாக மற்ற அரசியல் கட்சிகளுக்கு தங்கள் கட்சி ஊழலை பற்றி பதில் சொல்லவே நேரம் சரியாக இருக்கும் . ஆனால் கம்யூனிஸ்ட்களின் மேல் அந்த குற்றச்சாட்டை வைக்கவே முடியாது என்பதால் அடுத்ததாக பொருளாதார வளர்ச்சி பற்றி கேள்வி கேட்கப்படுகிறது . இதுவே கம்யூனிஸ்ட்களின் ஒரு வெற்றி தான் சமூக புரட்சி தான்....
கேரள மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலிலேயே, 1957, இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்து உலக வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொதுவுடமைத் தலைவரொருவர் மக்களாட்சித் தேர்தல் வழியே மாநில ஆட்சிக்கு தலைமையேற்ற பெருமை பெற்றார்.அவர் ஏப்ரல் 5 1957 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தியாவில் ஓர் மாநிலக்கட்சி பதவியேற்பதற்கு முன்னோடியாக அமைந்தது.
அவரது அரசு நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை நிறைவேற்றியது.
இந்திய மக்களாட்சி வரலாற்றில் மற்றொரு முன்னோடியாக 1959ஆம் ஆண்டு நடுவண் அரசால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 356 கீழ் கலைக்கப்பட்டது.1967ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.இம்முறை அவரது ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.
ஆட்சி கலைக்கப்பட்ட வரலாற்றை படித்தால் முதலாளித்துவ அரசுகளின் முதலாளிய விசுவாசத்தை அறிந்து கொள்ளலாம் .
நில சீர்திருத்தம் பற்றி தமிழர்கள் கேள்வி பட்டிருக்க வாய்ப்பே இல்லை . பண்ணையார்களின் நிலங்களை பிடுங்கி விவசாய தொழிலாளர்களுக்கும் நிலமில்லாத ஏழைகளுக்கும் பிரித்தளிக்கப்படுவது . இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களை தவிர வேறு எங்குமே இயலாத ஒன்று
அடுத்ததாக , வாழ்க்கைத்தரம்
“கேரளா வளர்ந்த நாடுகளுள் விநோதமான முரண்பட்ட கொள்கையும், வருங்காலத்தில் மூன்றாம் உலகத்தை படைக்கும் என்ற உண்மையான நம்பிக்கை தரும் மாநிலமாகவும் உள்ளது. பெரும்பாலான நிலப்பகுதி நெற்பயிரால் சூழப்பட்ட சமவெளிகளை கொண்ட்து, புள்ளி விவரப்படிப் பார்த்தால் கேரளாவின் சமூக வளர்ச்சி எவரெஸ்ட் சிகரம் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது” என்று பில் மிக்கிபென், தேசிய புவியியல் பயணி என்ற வெளியீட்டில் அக்டோபர் 1999-இல் குறிப்பிட்டுள்ளார்.
சமூக நலம் மற்றும் தரமான வாழ்க்கை என்ற நிலையில் பார்க்கும் போது கேரளா இந்தியாவின் மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் பிற குறைந்த வருவாய் நாடுகளிலிருந்தும் மாறுபட்டு கேரளத்தினர் கல்வியிலும் உடல் நலத்திலும் மேலை நாடுகளுக்கு இணையான நிலையை அடைந்துள்ளனர் இந்தியாவின் அதிகப்படிப்பறிவு விகிதம், உயர்வான வாழ்க்கைத்தரம், குறைந்த குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை இம்மாநிலத்தின் வரமாகும்.
கேரளாவின் அனைத்து சமுதாய நிலையில் உள்ள மக்களுக்கும் பெருமளவில் சேவைகளும் வாய்ப்புகளும் கிடைப்பதோடு, பெருமளவில் கட்டுப்பாடு மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மாநிலம் நகரமயமாக்கலில் முதன்மையாகவும் சட்டம் ஒழுங்கு பராமரித்தலை நல்ல முறையில் கடைபிடிக்கும் மாநிலமாகவும் உள்ளது.
வெளி மாநிலங்களில் பஞ்சம் பிழைக்க செல்பவர்களின் சராசரி கேரளாவில் மிக மிக குறைவு . தனிமனித வருமானம் வளர்ச்சியடைந்த தமிழகத்தை விட அதிகம் . மனிதவள மேம்பாடு அதாவது தனிமனிதனின் வாங்கும் சக்தி அங்கு அதிகமாக உள்ளது . இன்னும் குறிப்பாக தொழிற்சங்க வளர்ச்சி அங்கே தொழிற்சாலைகளில் ஊதியம் அரசால் கண்கானிக்கப்படுகிறது இடையில் ஒப்பந்ததாரர்கள் சுரண்டல் இந்தியாவிலேயே குறைவு .இது கூட இந்த சட்டங்களில் மத்திய அரசு தலையீடு இருப்பதால் தான் . அதிகார பகிர்வு இல்லாததால் தான் .
கேரளா ஒரு முதலாளித்துவ அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சோசலிச பயணத்தில் உள்ள ஒரு நாடு . கடந்த கால முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளால் தான் ஆட்சி களைக்கப்பட்டது . இப்போதும் அதே சூழல்தான் உள்ளது . மத்தியில் கம்யூனிஸ ஆட்சி வரும்போது கண்டிப்பாக அம்பானி அதானி போன்ற பெருமுதலாளிகளின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு அதன் உண்மையான உரிமையாளர்களான ஏழைகளுக்கு உழைக்கும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் ......
திரிபுரா :
சின்னஞ்சிறு மாநிலமான திரிபுரா பல சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது...
மாநிலத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஆண்டுக்கு 98 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஊழல் முறைக்கேடுகளுக்கு இடமில்லை.
ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை முற்றிலும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது; டியூஷன் பீஸ் கிடையாது.
98 சதவீத மக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
97 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
வீடு, நிலம் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது; குறிப்பாக விவசாயிகள் தற்கொலை என்பது மாநிலத்தில் அறவே கிடையாது.
தலித் மற்றும் மலைவாழ் மக்களுக்காக சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்த தீவிரவாத குழுக்கள் அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு பேச்சுவார்த்தை மூலமாக மாநிலத்தில் அமைதி நிலவுகிறது.
தீண்டாமை கொடுமையென்பது அறவே கிடையாது.
ஒவ்வொரு 5 ஆண்டு காலத்திலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த புதிதுபுதிதாக திட்டங்களை தீட்டபடுகிறது
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது...
0 comments:
Post a Comment