Latest News

தத்துவம் என்றால் என்ன ?

தத்துவம் என்றால் என்ன என்று விடை தேட புறப்பட்டால் பயங்கர பீடிகையோடு பல வியாக்கியானங்களை காண முடிகிறது

தத்துவம் என்பது ஆண்மீக தொடர்பானது
தத்துவம் என்பது எளிதில் புரிந்து கொள்ள முடியாதது
தத்துவம் என்பது சிதம்பர ரகசியங்களை உள்ளடக்கியது
தத்துவம் என்பது பெரிய விசயத்தை ரத்தின சுருக்கமாக சொல்வது

ஆனால் கடைசி வரை தத்துவம் என்றால் என்ன என்பதற்கான சரியான தத்துவ விளக்கம் இல்லை

ஒரு மார்க்சியவாதியின் (ஜார்ஜ் பொலிட்சர் ) தத்துவ விளக்கம் இது

" நடைமுறையில் நாம் எவற்றை எல்லாம் மெய்ப்பித்து சாதிக்க விரும்புகிறோமோ அதன் மீது நமக்கு இருக்கும் ஞானமே தத்துவம் "

சமூகம் கொடுக்கும் அத்தனை வியாக்கியானங்களையும் உள்ளடக்கிய அதே நேரத்தில் தனித்துவமான விளக்கம் இது

மார்க்சியமும் இப்படித்தான் மிக இயல்பானது , எளிதானது . நம்மை சுற்றி பிண்ணப்பட்டிருக்கும் போலி பிம்பங்களை பட்டவர்த்தனமாக நமக்கு பகிரங்க படுத்தி காட்டி நம் சிந்தனையை தெளிவாக்குவது...

மார்க்சியமே மெய்யான தத்துவம்

0 comments:

Post a Comment