கட்சி கவணிக்க வேண்டியது
கட்சி என்பது கற்பவர்களுக்கு பல்கலைக்கழகமாகவும் , செயல் வீரர்களுக்கு பயிற்சி களமாகவும் இருக்க வேண்டும் . ஒரு பள்ளி வகுப்பில் மாணவர்களை எப்படி உருவாக்குகிறோம். முதலில் குறிப்பிட்ட பாடத்தை விரிவாக நடத்தி முடித்து விட்டு அதன் பிறகு தான் சந்தேகங்களை கேட்க சொல்கிறோம் . ஆனால் இங்கு அப்படி எந்த முறையும் இல்லை . சந்தேகம் வந்தால் கேள் வழி சொல்கிறேன் என்று தான் இருக்கிறது . கற்றால் தானே சந்தேகம் வரும் . சந்தேகம் தீர்ந்து தெளிவு பிறந்தால்தானே அதை களத்தில் செயல்படுத்த முடியும்
எம்ஆர்பி ரேட்டுக்கு மேல் தினமும் தன்னுடைய பணம் இரண்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை அதிகமாக கொடுத்து பொருளை வாங்கும் போது எதிர்க் கேள்வி கேட்க முடியாத அல்லது பழக்கப்படுத்தப் படாத ஒருவனிடம் சென்று
கண்ணுக்கே தெரியாத எளிதாக புரிந்து கொள்ள முடியாத சூட்மமான முறையில் பறிக்கும் கார்ப்பரேட் களவாணித்தனங்களை தட்டிக் கேள் கோபம் கொள் என்றால் அவன் எப்படி உன்னை சட்டை செய்வான் . எங்கிருந்து புரட்சி வரும்
இது தான் ஊழியர்களின் தரமின்மையாக மாறுகிறது
அடுத்தது
பெரும்பான்மை மக்களின் எண்ணவோட்டம் என்பது தாம் ஏதாவது ஒரு அதிகார மட்டத்தோடு ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்பது தான். அது தான் சமூக பாதுகாப்பு என்பதை அவர்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள் . அது சரியா தவறா என்பது பற்றியோ அந்த நபர் நல்லவரா கெட்டவரா என்பது பற்றியோ எந்த புரிதலும் அவசியம் இல்லை அவர்களுக்கு . அவர்களை எந்த வகையிலும் பகைத்துக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை . மிக சொற்பத்திலும் சொற்பவமானவர்களே சுய உணர்ச்சி உள்ளவர்களாக அதிகார வர்கத்தால் தாங்கள் கிள்ளுக்கீரையாக உதாசினப்படுத்தப்படுவதை அறிந்து வைத்துள்ளார்கள் .
முரட்டு பக்தன் , உண்மை விசுவாசி தலைவனுக்காக தீக்குளிப்பேன் , நாக்கை அறுப்பேன் இதெல்லாம் கொள்கை பற்றுக்காகவோ சமூக அக்கறைக்காகவோ வா ? சத்தியமா இல்ல ; பக்காவான சுயநலமான பதவி ஆசை , அதிகாரத்த கைப்பற்ற நடக்குற கேடுகெட்ட ஒரு யுக்தி
தியாகம் என்பதற்கான மக்களின் புரிதலுக்கும் கட்சியின் செயல்பாட்டிற்கும் இடையே உள்ள உணரப்படாத ஒரு விதி நம் தியாக போராட்டங்களை நீர்த்துப் போக செய்து கொண்டே இருக்கும் . காவல்துறையிடம் தடியடி வாங்குவதையோ , கட்சி ஊழியர்களை எதிரிகளிடம் பலி கொடுப்பதையோ ஒரு போதும் கட்சியின் தியாக பார்வையில் பொதுசனம் அணுகுவதில்லை
மாறாக அதற்கான உங்களது எதிர்வினை என்ன ? அதில் நீங்கள் பலமாக அவனை வெற்றி கொண்டீர்களா ! என்பதையே அவர்கள் கவணிக்கிறார்கள் . அப்படிப்பட்டவர்களோடு இணையவே அவர்கள் விரும்புகிறார்கள்
இதுதான் வெகுஜன இயக்கங்களில் மக்களை ஈர்க்க முடியாமல் போனதற்கான காரணம்
பொருளாதார பாதுகாப்பு :
கட்சி உறுப்பினர்களை பொதுப்புத்தியாக மேல்மட்ட திட்டத்தை மட்டும் நிறைவேற்றும் செக்கு மந்தையாக வைத்து கட்சியை வளர்த்துவிடலாம் என்பது மார்க்சிஸ்ட்களுக்கு அழகல்ல .
அது கட்சியை சீரழித்து விடும்
"சுற்றியுள்ள சூழ்நிலையை சரியாக கணிப்பதிலும் சமூக மாற்றத்திற்கான திட்டத்தை வகுப்பதிலும் கைதேர்ந்தவர் எவரோ அவரே உண்மையான செயல்வீரர் "
குடும்பத்தை பற்றி கவலை கொள்ளாமல் அது எக்கேடும் கெடட்டும் வந்து மக்கள் சேவை யாற்று என்கிறதா கட்சி. அப்படி சொல்வது எப்படி ஒரு விஞ்ஞானபூர்வ யதார்த்தமான கட்சியாக முடியும் . விரல் விட்டு எண்ணக்கூடிய சில தலைவர்களை உதாரணம் காட்டி இப்படி இருக்கும்படி பணித்தால் அடிப்படையில் அது ஒரு யதார்த்த கட்சி அல்ல .
முழுக்க முழுக்க கார்ப்பரேட் மயமாக மாற்றிவிட்ட உலக சூழலில் தற்சார்பு பொருளாதாரத்தை இழந்து தனியார் முதலாளியிடம் அடிமையாக வேலை செய்யும் தொழிலாளிக்கு ஒரு நாளின் ஒரு மணி நேரம் கூட சொந்தமில்லை
அப்படி இருக்கையில்
தனியார் தொழிற்சாலைகளின் ஒப்பந்த தொழிலாளி தன்னுடைய திருமணத்திற்கே அதிகபட்சம் ஐந்து நாளுக்கு மேல் விடுப்பு எடுக்கமுடியாத சூழலில் , தொடர்ந்து பத்து நாட்கள் வேலைக்கு செல்ல முடியாவிட்டால் சோத்துக்கு திண்டாடும் குடும்ப சூழலில்
ஏதோ ஒரு போராட்டத்தில் கைதாகி சிறை சென்றால் அதனால் அவருடைய வேலை பறிபோனால் அவனுடைய குடும்ப நிலை என்ன ? இதற்கு கட்சியிடம் இருக்கும் தீர்வு என்ன ?
இந்த சூழலை உணர்ந்த சாமானியன் எப்படி வருவான் களத்திற்கு . அவனுடைய நியாயமான அச்சத்திற்கு கட்சி காட்டும் வழி என்ன ?
நிலைமை இப்படி இருக்க புரட்சி செய் போராடு என்று எப்படி அணிதிரட்ட பொதுமக்களை ?
எப்படி ஒரு தொழிலாளிக்கு தெரியாமல் முதலாளித்துவ விதிகள் அவன் மேல் அதிக பாரமாய் வேலை செய்கிறதோ
அது போல் கட்சியை வலுவிழக்க செய்யும் சமூக விதிகள் இவைகள்
இதை களையாவிட்டால் எந்த காலத்திலும் நாம் இங்கு காலூன்ற முடியாது
0 comments:
Post a Comment