பார்ப்பானும் பார்ப்பனியமும் வேறு வேறா? அப்படி இருக்க முடியாது. பார்ப்பனியம் என்பது பிறப்பின் அடிப்படையில் சக மனிதனை இழிபிறவியாக கருதுவது. சுடாத நெருப்பு எப்படி இருக்க முடியாதோ அதுபோல மநுவை ஒதுக்கிய பார்ப்பானும் இருக்க முடியாது. மநுவின் விருப்பங்களை நிறைவேற்ற துடிக்கும் மனிதனைக் குறிப்பது தான் பார்ப்பான் எனும் சொல். பார்ப்பனியம் என்பது தனிப்பட்ட பண்பா ? அல்லது அந்த பண்பை கொண்டிருக்கும் மனிதர்களா ? பொன்.ராதாகிருஷ்ணன் , எச்.ராஜா போன்ற பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை பார்ப்பனியத்தை தான் எதிர்க்கிறோம் என்பதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா ? எனவே, பார்ப்பானும் பார்ப்பனியமும் பிரிக்க முடியாதவைகள்.
இழப்பதற்கு எதுவுமில்லாதவன் ,
எதையும் இழக்க தயாராய் இல்லாதவனால்
இழப்பதற்கு எதுவும் இல்லாதவனாகவே
வைத்திருக்கப்படுகிறான்...
வாய்ப்பு கிடைக்கும் வழிகளிலெல்லாம் விடுதலையை அடைய துடிப்பது தான் அடிமையின் பார்வையாக இருக்க முடியும் .
கொட்டுவது தேளின் குணம் தூக்கி விடுவது எங்கள் குணம் என்று தேளுக்கு கொட்ட கொடுக்கும் அதீத பக்குவம் கம்யூனிஸ்ட்களுக்கானது அல்ல அது மரத்தடி வேதாந்திகளுக்கானது....
0 comments:
Post a Comment