Latest News

நடப்பது 21ம்  நூற்றாண்டு இங்கு ஏறக்கறைய எல்லா தத்துவங்களும் சிந்தனைகளும் வகைப்படுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டு விட்டது

உங்கள் சிந்தனைகளை இதுவரை உங்களால் ஒழுங்குபடுத்தி கொள்ள முடியவில்லையா . இதோ உங்களுக்கான ஒரு எளிய சூத்திரம்

ஆன்மீகம் - அறிவியல்
வலதுசாரி - இடதுசாரி
முதலாளித்துவம் - கம்யூனிசம்

உங்களுடைய பேச்சுக்களும் சிந்தனைகளும் இதில் எப்பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்தே நீங்கள் முற்போக்காளரா அல்லது பிற்போக்காளரா என்பதை அறிவுச்சமூகம் தரம் பிரிக்கிறது.

நீங்கள் கடவுள் நம்பிக்கையாளரா , வலதுசாரி சிந்தனையாளரா , முதலாளித்துவத்தை ஆதரிப்பவரா அப்படியானால் நீங்கள் பிற்போக்காளர் பட்டியலில்தான் வருகிறீர்கள். ஆனால் பிற்போக்கு என்கிற பதத்தை ஏற்க உங்கள் பகுத்தறிவு உங்களை அணுமதிக்கவில்லையா ? உங்களுக்கு அது ஏதோ பாவச்செயல் போல் தெரிகிறதா ? அப்படியானால் நீங்கள் முற்போக்காளராக மாற முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒரு பிற்போக்குவாதி என்று கொள்ளலாம். உங்களுக்கு தெரியுமா மேலைநாடுகளில் இப்படி சொல்ல அவர்கள் கூச்சப்படுவதில்லை அதாவது அவர்களுடைய சிந்தனைகளுக்கு அவர்கள் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களை பெருமையோடு வலதுசாரி, முதலாளித்துவவாதி, ஆன்மீகவாதி என்று அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நம்மவர்களிடம் அந்த நேர்மை இல்லை

சரி இப்போது உங்களுடைய வாய்ப்பு .உங்களை நீங்களே இதன்படி தரம்பிரித்துக் கொள்ளுங்கள்

( குறிப்பு : முற்போக்கு என்பது புனித சொல்லும் அல்ல ; பிற்போக்கு என்பது பாவ சொல்லும் அல்ல இது உங்கள் சிந்தனையை நீங்கள் ஒழங்குபடுத்தி புரிந்து கொள்ள உதவும் ஒரு முயற்சி அவ்வளவே. முடிந்தளவு உங்கள் சிந்தனைகளுக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்  )

0 comments:

Post a Comment