"இட ஒதுக்கீட்டு கோட்பாடு" நூறு சதம் சரியானது. அதன் செயல்வடிவம் தான் வரலாற்று பிழையானது
அதுவும் ஆண்டசாதி பெருமை பேசுபவனை இட ஒதுக்கீட்டுக்குள் வைத்துக்கொண்டு சமூகநீதி பேசுவது அயோக்கித்தனமானது, பச்சையான ஓட்டரசியல்...
இட ஒதுக்கீடு பொருளாதாரம் சார்ந்ததல்ல அது சமூக நீதி சார்ந்ததுனு திரும்ப திரும்ப சொல்றாங்க
ஆனா அந்த நகர்த்தல் பொருளாதார தேவை சார்ந்ததாக மட்டும் தான் இருக்கிறதே தவிர இம்மியளவு கூட சாதி ஒழிப்புக்கானதாக இல்லை என்பதே யதார்த்த உண்மை...
மனுவின் தொழில் பிரிவினை ஆண்டாண்டு கால அடிமைத்தனத்தின் குறியீடு என்றால் அதை விட்டு வெளியே வர அந்த மக்களை தடுப்பது அவர்களின் பொருளாதார சூழல்தான்
130 கோடி மக்கள் தொகையில்
எஸ்சி 26 கோடி ,பழங்குடிகள் 11 கோடி,
பிசி 53 கோடி. ஆனா இந்தியாவில் எல்லா சாதி பிரிவினர்களுக்கும் சேர்த்தே அரசு வேலை என்பது வெறும் 2.5 கோடிதான்...
பொருளாதார கண்ணோட்டம் இல்லாத சமூகநீதி கோட்பாட்டின் நிலை இவ்வளவுதான்.
ஆண்ட சாதி பெருமை பேசுபவனை யெல்லாம் பிற்பட்ட பட்டியலில் வைத்து கொண்டு சமூகநீதி பேசுவது கடைந்தெடுத்த அயோக்கித்தனம். பிழை கம்யூனிஸ்ட் கட்சியிடம் இல்லை பிழைப்புவாத திராவிட கட்சிகளிடம் தான் இருக்கிறது...
இட ஒதுக்கீடு அறிவு பகிர்தல் சார்ந்தது என்பது இதுவரை கேள்வியுறாத வாதம். சமூகத்தில் சாதி ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தின் எல்லா மட்டத்திலும் வாய்ப்புகளை வழங்குவது தான் இட ஒதுக்கீடு கோட்பாடு. அதாவது அடிப்படையில் அது சமூகத்தில் அதிகார பரவல் தொடர்பானது. அதிகாரம் என்பது பொருளாதார ஆக்கிரமிப்புகளை அடிப்படையாக கொண்டது. சாதியின் தோற்றமே சொத்துக்களின் மீதான அதிகார சண்டையில் உருவானது தான்...
இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி சார்ந்தது, பொருளாதாரம் சார்ந்ததல்ல என்று காலம் காலமாக ஏதோ மதவாதிகளின் புனித வாக்கியம் போல சொல்லி வருகிறார்கள். ஆனால் எந்த வகையில் அது பொருளாதாரம் சாராத ஒன்றாக இருக்கிறது அதற்கான ஆதாரம் என்ன என்று கேட்டால் பதில் இல்லை. பொருளாதாரம் சாராமல் இங்கு எதுவுமே இல்லை. எழுபது சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழுள்ள ஒரு நாட்டில் பொருளாதாரம் சாராத ஒரு ஏற்பாடுதான் உண்மையில் சமூகநீதிக்கு எதிரானது
இட ஒதுக்கீடு பொருளாதாரம் சார்ந்தது இல்லை என்பதுவே மறைமுகமாக அது பொருளாதாரம் சார்ந்ததாக இருக்க தேவையில்லை அல்லது இருக்க கூடாது என்கிற சூழ்ச்சிதான்.
0 comments:
Post a Comment