"அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு போராட்டம்" என்று அறிவித்தாலே இப்படி ஒரு அலறளை கேட்க முடிகிறது
"படித்து முடித்து சரியான வேலை கிடைக்காமல் தனியார் நிறுவனங்களில் 6000 சம்பளம் வாங்குறவனோட கஷ்டம் இவனுங்களுக்கு எங்க தெரிய போகுது .இப்ப இவனுங்க சம்பளம் என்ன அப்படி குறைஞ்சு போயிடுச்சாம் "
கல்வி , மருத்துவம் , வேலை இந்த மூன்றும் அரசின் கட்டாய கடமைகள் என்பதையும் , அது மக்களின் அடிப்படை உரிமையில் ஒன்று என்பதையும் எல்லா மட்டத்திலுமுள்ள மக்களின் மனதிலுமிருந்து அழித்துவிட்டதன் ஓரளவு வெற்றியே இப்படியான வாதங்களை மீண்டும் மீண்டும் தலையெடுக்க செய்கிறது. ஆனால் அதை இன்றளவும் போராட்ட வடிவமாக்கி உயிர்ப்புடன் வைத்திருப்பதே அரசு ஊழியர்கள் தான் என்பதிலிருந்து இதை தொடர்வோம்.
முதல்ல அரசு ஊழியர்களுக்கான இந்த ஊதிய உயர்வ கட் பன்னிட்டா தனியார் தொழிற்சாலையில 6000 சம்பளம் வாங்குறவனோட வருமானம் எப்படி கூடும் . அடுத்ததா மக்கள் பணத்த வாரி சுருட்டிக்கிற ஜெயா, கருணா மாதிரி ஆளுங்க இந்த பணத்த மறுபடியும் அவங்க வீட்டுக்கு கொண்டு போகாம வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு பன்னுவாங்கன்னு எப்படி எந்த அடிப்படையில நம்புறது ?
உங்களுடைய கோரிக்கை இதே சம்பளம் எல்லாருக்கும் கிடைக்கனும்ங்கிறதா இல்ல எனக்கு கிடைக்கல அதனால யாருக்கும் கிடைக்க கூடாதுங்கிறதா .. ஆண்டு பட்ஜெட்ல பாதிய அம்பானிக்கும் அதானிக்கும் ஒதுக்கும் போது இப்படி நீங்க எதிர்க்கலயே ஏன் ? . கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லையே ஏன் ? .. என்றாவது சிந்தித்ததுண்டா ? கேள்வி கேட்டதுண்டா?
ஊழியர்களின் ஊதிய உயர்வு போராட்டத்திற்கும் உங்களோட வேலையின்மைக்கும் முடிச்சு போடுவதில் தான் இருககிறது முதலாளித்துவத்தின் வெற்றியே !
"பூனையைவிட சிங்கம் வலிமையானது என்று ஒருபோதும் எலி ஒப்பு கொள்வதில்லை" என்பது தான் நினைவுக்கு வருகிறது இவர்களை பார்க்கும் போது.....
0 comments:
Post a Comment