கடவுள் புலன்களுக்கு கட்டுப்படாதவர்.புலன்களை கடந்து கடவுளை உணர வேண்டும் .கடவுள் பற்றிய விவாதத்தில் தோற்பவர்கள் இறுதியாக கையில் எடுக்கும் வாதத்தில் இதுவும் ஒன்று.
மனிதன் எப்படி சிந்திக்கிறான். "மூளை இருப்பதால் தான் அவன் சிந்திக்கிறான் .சிந்தப்பதற்கு மூளை அவசியம் தான் ஆனால் ஐம்புலன்களை தாண்டி மூளையால் ஒரு போதும் சிந்திக்க முடியாது.
ஐம்புலன்கள் எது ? கண் ,காது ,மூக்கு ,நாக்கு ,தொடுஉணர்வு.நாம் கண்ணால் பார்க்கிறோம்.ஐம்புலன்களின் உணர்ச்சிகளின் வசமாகிறோம் என்ற ஒரே காரணத்தினால் தான் நமக்குக் கருத்துகளும்,சிந்தனைகளும் ,மனோஉணர்ச்சிகளும் பிறக்கின்றன.
உதாரணத்திற்கு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வோம் .பார்வை இருப்பதால் மட்டுமே நம்மால் அதன் நிறத்தை அறிய முடிகிறது.மேலும் தொடு உணர்வு மூலமே அதன் வடிவத்தை நாம் உணர்கிறோம்.
கண் எனும் புலன் இல்லாத பட்சத்தில் நிறம் எனும் சிந்தனை நமக்கு இருக்க முடியுமா ?.தொடுஉணர்வு இல்லாத பட்சத்தில் எந்த பொருளின் வடிவமும் நமக்கு இல்லை.ஒவ்வொரு புலனுக்கும் இதே முறைதான்.
சிந்தனை என்பது மூளையில் உதிக்கும் எண்ணங்கள்.ஏற்கனவே உதித்து விட்ட எண்ணங்களை வைத்து செயல்படுவதுதான் அறிவு ,பகுத்தறிவு என்பது.
சிந்தனை என்பது பகுத்தறிவுக்கும் முந்தைய நிலை.
ஏற்கனவே உதித்த சிந்தனையை சீர்தூக்கி பார்த்து முடிவு செய்வதுதான் பகுத்தறிவு....
புலன்கள் என்பது மூளைக்கு 1+1=2 என சொல்லி கொடுப்பது அல்ல. அந்த வேலையை மூளைதான் செய்கிறது அதாவது பகுத்தறிவு.ஆனால் அதை மூளைக்கு எடுத்து செல்வது புலன்களே.
இங்கு வாதமே புலன்களை தாண்டி மூளைக்கு சிந்தனை இல்லை என்பது தான்
கடவுள் புலன்களுக்கு கட்டுபடாதவர்.ஆனால் அவர் இருப்பது உண்மை.இது ஆண்மீகவாதம்.
மனிதனுக்கு புலன்களை தாண்டி சிந்திக்க வழி இல்லை எனும்போது கடவுளை உணர வழி ஏது ?
கடவுளை உணர வழியே இல்லாத போது கடவுளை நம்பாதது தண்டனைக்குரிய குற்றம் என்பது முட்டாளின் வாதம்.ஏமாற்று வேலை.....
0 comments:
Post a Comment