Latest News


உலகில் தவறே செய்யாதவர்கள் இருவர் மட்டும் தான் .ஒன்று கருவிலும் மற்றொன்று கல்லறையிலும் இருக்கும்.இது முழுக்க முழுக்க பொருள்முதல் வாத கண்ணோட்டமே...
ஆனால் கருத்து முதல் வாதிகளிடம் தவறு செய்யாத நிலை என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் பக்கம் பக்கமாக அடுக்குவார்கள் .உண்மையில் அது புறநிலை யதார்த்தம் அல்லாத தங்கம் கற்பனையில் வடித்து வைத்த பாத்திரம் மட்டுமே என்பதை எப்போதுமே அறிவதில்லை...

வாழ்க்கை மனிதனுக்கு எல்லாவிதமான அனுபவங்களையும் கற்று கொடுக்கதான் செய்கிறது . ஆனா அதன் சூழ்ச்சிகளையும் சூச்சுமங்களையும் எல்லோராலயும் புரிஞ்சுக்கதான் முடியல..அப்படி அவன் புரிஞ்சுக்கிற நேரத்துல அத எதிர்த்து போராடவோ அல்லது அத மாத்தவோ அவனுக்கு சரியான கொள்கையும் கட்சியும் தேவைப்படுது.

எங்களோட பாதை அவ்வளவு சுலபமில்லை என்பதையும் அதன் கடினத்தையும் நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்..சூழல் வயப்பட்டு தவறு செய்கிற மனிதனையும் தவறு செய்விக்க அந்த சூழலை உருவாக்குபவனையும் ஒரே தராசில் வைத்து எடைபோட முடியாது.அந்த சூழல் மாறும்போது எல்லாமே மாறிவிடும் .அதை மாற்றுவதற்கான வழியை எல்லோரிடமும் எடுத்து செல்வது மட்டும்தான் எங்களுடைய வேலை.மாற்றத்தை மக்கள்தான் படைக்க வேண்டும் படைக்கிறார்கள் படைப்பார்கள் .

அதற்கு தேவையான போராளிகளையும் அந்த சூழலில் இருந்துதான் பொறுக்க முடியும்.இதற்கு நீங்களோ நானோ யாருமே விதிவிலக்கல்ல.. நாம் எல்லோருமே அங்கிருந்து வந்தவர்கள் தான்.

புனிதம் என்று எதுவுமில்லை இங்கு....

0 comments:

Post a Comment