நம்ம வீட்டு பெண்குழந்தைங்க மேல நமக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்க முடியும். ஆனா கண்முன்னாடி இருக்குற கேடுகெட்ட சமூகத்த அம்பலபடுத்தாம , சீழ்பிடித்த ஆணாதிக்க வக்கிரத்த தோலுரிக்காம திரும்ப திரும்ப பழிய ஏன் பெண்ணோட ஆடை மேலயே போடுறீங்க. அத்து மீற படாத ஆடைனு எதும் மார்கெட்ல கிடைக்குதா என்ன..? .அஞ்சு வயசு குழந்தையில இருந்து ஐம்பது வயசு கிழவி வரைக்கும் சீண்டல் நடந்ததுக்கு ஆதாரம் இருக்கு. அங்கெல்லாம் ஆடை எங்கிருந்து பிரச்சனையா வந்திச்சு.
ரோடுல மலம் கிடந்தா பாத்து காலுல மிதிச்சிராம போமான்னு சொல்றீங்க. ஆனா அந்த மலத்த அங்க இருந்து அப்புறபடுத்த என்னைக்காவது நினைச்சதுண்டா .சரி அத அகற்ற நினைக்கிறவனையும் ஏன் தடுக்கனும்.குறைந்த பட்சம் அது மலம் தான் என்கிற ஒப்பு கொள்ளுதலாவது உண்டா .சமூகம் கெட்டுக் கெடக்கு அதிலிருந்து காப்பாத்த தான் ஆடை விசயத்துல தலையிடுறோம்னு ஒரு வாதம் வேற.
யாருகிட்ட இருந்துங்க காப்பாத்த போறீங்க. அப்போ ஏன் அந்த அசிங்கத்த மலம்னு கூட சொல்ல விட மாட்டிக்கீங்க.
பெண்ணுக்கெதிரான பாலியல் சீண்டலின் போதெல்லாம் அங்கே குற்றவாளியாக நிறுத்தப்படுவது அதே பெண்தான்.
முதலில் அரசு தன்னுடைய தவறை மறைக்க இதை ஒரு வகையில் மறைமுகமாக ஆதரிக்கிறது. அரசு தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகியதன் வெளிப்பாடுதான் எல்லா சமூக அவலங்களுக்கும் மூலம். சமூக அக்கறைக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்பதில் தான் பாலியல் சீண்டலுக்கான புறச்சுழலை பற்றிய புரிதல் இல்லாத , அதை தடுக்க முற்படாத அக்கறையின்மை வெளிப்படுகிறது . அதை மறைக்கவே ஆடை , இரவு பயணம் , பண்பாட்டு சீரழிவு என்ற சப்பை கட்டுகளை கிளப்பி விடுவது. ஆபாச வலைதளங்கள தடை பன்னவே இங்க கோர்ட் வர போயி தோத்தாச்சு. இதுல பாலியல் கல்விய வேற எதிர்ப்பது.பெண்ணுக்கு அறிவு கொடுக்காதே என்கிற மட மத கழிவுகளையும் எதையுமே வியாபாரமாக்க துடிக்கிற லாபவெறியில திணிக்கப்பட்ட உளவியல் , பொருளாதார சிக்கலையும் தாண்டி இதுல வேற எந்த எழவும் கிடையாது.
இதில் பொதுப்புத்தியிடம் இருப்பதெல்லாம் ஆணாதிக்கம், இயலாமை , அதோடு வக்கிரம் தான். இயலாமை தான் ஆணாதிக்கமாக மாறி கற்பு , கன்றாவி என்று பெண்ணை வெறும் சதை பிண்டமாக , கலவிக்காக மட்டுமே படைக்கப்பட்ட ஒரு நுகர்வு பண்டமாக பார்க்க சொல்கிறது .வக்கிரம் தன்னுடைய தப்பை மறைக்க பழியை பெண்ணின் ஆடை மீதே போட சொல்லுது.
"என்ன ஆடை உடுத்தினால் பாதுகாப்பு என்பதையும் அதே சமயத்தில் என்ன ஆடை உடுத்தினாலும் அத்து மீறுவது அநாகரிகம் அநியாயம் என்பதையும் சேர்த்து முடிவினை உங்கள் வீட்டு பெண்களே செய்கின்ற அறிவினை கற்கின்ற வாய்ப்புகளை கொடுக்க மட்டும் உரிமை எடுத்து கொள்ளுங்கள் அவர்களிடம்".
0 comments:
Post a Comment