Latest News

சமூக ஊடகமான முகநூலில் ஒரு நூறு லைக்கை தாண்டிவிட்டால் போதும் உடனே தங்களை ஒரு எழுத்தாளனாக சிந்தனையாளனாக நினைத்துக் கொள்ளும் ஒரு மனநோயை பரவலாக காணமுடிகிறது.

அது சரியா தவறா என்கிற சுயபரிசோதனையையும் மறுத்து அந்த நோய் நம்மை ஆட்டுவிக்கிறது
பிரபலமாக இருப்பதினாலேயை எழுத்தாளனாக அறியப்படுவதும் பணம் படைத்தவனெல்லாம் சிந்தனையாளனாக காட்டப்படுவதும்தான் இதில் இருக்கும் மெய்யான தகவல்.

பொய்யைவிட உண்மையின் பாதை ரொம்பவே கடினமானது என்பதற்காக தவறான பாதையில் பயணிக்க முடியாது.பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்ட விருப்பங்களை நிறைவு செய்வதை விட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஒலிக்கும் குரல்தான் அர்த்தமானது சரியானது.

உழைக்கும் மக்களின் விடுதலைக்காக சதாகாலமும் சிந்திப்பவனும் எழுதுபவனுமே உண்மையான எழுத்தாளன் .
வாழும் காலத்தை தாண்டி மட்டுமே சமூகத்தால் அறியப்பட்ட எத்தனையோ ஞானிகளை நாம் படித்துள்ளோம்.எதுக்கும் உதவாத சிலதுங்க பெரிய விஞ்ஞானிபோல தூக்கி வைத்து கொண்டாடப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.மோடி ,ஜெயா, கலைஞர் என திருடர்களையெல்லாம் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்த இதே தேர்தல் அரசியல்தான் அம்பேத்கர் , நல்லகண்ணு , காமராஜர் போன்றவர்களை தோற்கடித்தது.
பெரும்பாண்மையை மட்டும் வைத்து கொண்டு எந்த ஒன்றையும் தீர்மாணிக்க முடியாது .ஏசுவை சிலுவையில் ஏற்றியதும்
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை அரசு பள்ளிக்கூட சமையல் கூடத்தை விட்டு துரத்தியதும் கூட இதே ஆதிக்க பெரும்பாண்மை தான்.

எழுதுங்கள் நிறைய எழுதுங்கள் சமூக மாற்றத்தை அது எவ்வளவு தூரமும் தள்ளி போடட்டும் ஆனால் அதன் இலக்கு தீர்மானிக்கப்பட்டதாய் இருக்கட்டும் . எதை எழுதுகிறோம் எதற்காக எழுதுகிறோம் என்பதில் தான் உங்கள் எண்ணங்கள் எடை போடபடுகிறது.உங்களுடைய எழுத்துக்கள் உங்களை மேலும் செழுமைபடுத்தும் உண்மையாளனாக மாற்றும்...

0 comments:

Post a Comment