"குடிப்பதற்கு கூழுமிலார்
அதன் காரணமும் அறியார்"
உண்மையில் அந்த காரணம் அவ்வளவு சுலபமாக அறிய கூடிய வகையில் இல்லை.மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பல பிரச்சனைகள் வாழ்க்கையில் இருக்கலாம். ஆனால் எல்லா மனிதர்களையும் இணைக்கக்கூடிய ஒரு பொதுமையான பிரச்சனை என்றால் அது பொருளாதார பிரச்சனை தான்.
இதை சரி செய்து விட்டால் நம்முடைய பிரச்சனைகளில் முக்கால் விழுக்காடு தானாக சரியடைந்துவிடும் மீதி இருக்க கூடியதெல்லாம் அதே பொருளாதாரத்திற்காக சில தனிப்பட்ட நபர்களின் லாப வெறிக்காக உண்டாகப்பட்டதுதான்.அது நம் உடல் சார்ந்த மனம் சார்ந்த நோயாக இருக்கலாம் இன்னும் வேறு ஏதேனுமாக இருக்கலாம்.
ஆதிகாலத்தில் மனிதனின் சராசரி ஆயுள் நூறை தாண்டி இருந்துள்ளது.இன்றிருக்கும் பெயர் தெரியாத கொடிய நோயிலிருந்து இந்தியா போன்ற நாடுகளை ஆட்டுவிக்கும் நீரிழிவு நோய் வரை அனைத்துமே தனிமனிதர்களின் லாபவெறிக்கு பலியானதன் விளைவுதான்.
முதலாளிகள் என்றுமே எதையுமே மக்களுக்கான நன்மை என்பதிலிருந்து பார்ப்பதில்லை லாபம் ஒன்றே குறி.முதலாளித்துவ அறிஞர்களே கூட இதை ஏற்றுக் கொண்டாலும் அவர்களின் அந்த அக்கறையின்மையை தவறு என்று ஏற்றுக் கொள்வதில்லை.அவர்களுக்கு வால்பிடிக்கும் கொடுக்குகள் அதை கூட ஏற்றுக் கொள்ளாதுகள் என்பது வேறு விசயம்.அதாவது சுரண்டல் சரியே என்று தான் வாதிடுவார்கள் அதற்கு சுரண்டல் என்கிற பெயர் இருப்பதுவே தெரியாதது போல .பிறகு மூலதனத்தை காட்டி அதை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள்.ஆனால் அதற்கும் உபரி மதிப்பு கோட்பாடு ஆப்பு வைத்து விட்டது.ஆனால் சில விசயங்களை திட்டமிட்டு மறைப்பதன் மூலம் அல்லது கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் இதையும் சமாளித்து விட்டனர்.
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம்
பலரை பலகாலம் ஏமாற்றலாம்.கம்யூனிஸம் வெற்று கூச்சலோ வறட்டு சூத்திரமோ அல்ல அது எப்போதும் உயிர்ப்புடன் இருக்க கூடியது ஏனெனில் அதுதான் யதார்த்தம்.
நாங்கள் கூழ் கிடைக்காத காரணத்தை மட்டுமல்ல அது எதனால் தடுக்கப்படுகிறது என்பதையும் அதை எப்படி பெறுவது என்பதையும் அறிந்தே வைத்துள்ளோம் ஏனெனில் நாங்கள் கம்யூனிஸ்ட்கள்...
0 comments:
Post a Comment