Latest News

விடிகின்ற பொழுதினிலே
மாறாத தெதுவுமில்லை

இயக்க மாற்றம்
'விதி'யா லாகிறது
சமூக மாற்றம் நம்
'மதி'யா லாகிறது

சுரண்டலே யாதுக்கும்
சூத்திரமென கண்டால்
தனி உடமையதை ஒழிப்பதுவே
லட்சியமாய் கொண்டால்
வாழும் கனமெல்லாம்
வலிகூட வசந்தம்தான் உழைப்பவனுக்கு

சோசலிசம் மலராத மண்ணதிலே
பரிமாற வெற்று வாழ்த்துகளை தவிர
வேறெதுவு மிச்சமில்லை எங்களுக்கு
ஏனெனில் நாங்கள் ‪கம்யூனிஸ்ட்டுகள்

0 comments:

Post a Comment