Latest News

வீணாய்ப் போனதடா
எங்கள் வீரர்களின்
சுயநல மில்லா
சுதந்திர தியாகமுமே

வாங்கிய சுதந்திரம்
வாய்த்த தெங்கோ
சுரண்டிக் கொழுத்த
சூதாடி கூட்டத்திற்கே

முகமில்லா மனிதர்கள்
ஆயிரமாயிரம் உயிர் கொடுக்க
முகவரியாய் போன தெங்கோ
வர்ணத்தில் மூத்தவனுக்கே...

சுதந்திர தினமாம்
சுதந்திர தினம்
யாருக்கான தினமது

வறுமைக்கு வாழ்க்கைப் பட்ட
வறியவனுக்கா
வசதிக்காய் வாங்கிக் கொண்ட
வலதுசாரி வர்க்கத்திற்கா....

0 comments:

Post a Comment