Latest News

சோசலிசம் என்பது நடைமுறை சாத்தியமே இல்லாத ஒன்றா ?

நடைமுறை சாத்தியம் , யதார்த்தம் என்றால் என்னவென்று பார்ப்போம்

தகுந்த நிலைமைகளில் நடைபெறக்கூடியது சாத்தியம்  எனப்படும் .ஏற்கனவே நடைபெற்றிருப்பது யதார்த்தம் எனப்படும் .அதாவது சாத்தியம் நிறைவேறுகிற போது அது யதார்த்தமாக மாறிவிடுகிறது . யதார்த்தம் என்பது நிறைவேற்றப்பட்ட சாத்தியம் .சாத்தியம் என்பது எதிர்கால யதார்த்தம்

இது தான் இதற்கான வரையறை

சோசலிச சமூகம் அதாவது சம உடமைக்கு வருவோம் . மனிதர்களின் ஆரம்ப கால வரலாறே பொதுவுடமை சமூகம் தான் . ஆனால் அது திட்டமிடப்பட்ட விஞ்ஞான பூர்வமாக இல்லாததால் வீழ்ந்து போனது . அதன்பிறகு நவம்பர் புரட்சியில் சோவியத் யூனியன் இருக்கிறது சோசலிச சமூகத்திற்கு சான்றாக .அது ஸ்டாலினுக்குப்பிறகு எதிரிகளால் வீழ்த்தப்பட்டது . வரலாறு சமவுடமை பாதையில் ஏற்கனவே பயணத்திற்கும் போது அது எப்படி சாத்தியம் இல்லாத ஒன்றாக முடியும்

இந்து மத எதிர்ப்பிற்கும் சோசலிச சமூகத்திற்கும் என்ன தொடர்பு ?

இந்திய அரசியல் சூழலை கணக்காக புரிந்து கொண்டால் மட்டுமே இதற்கான தெளிவு சாத்தியம். நம்முடைய பொருளாதார பிரச்சனைக்கெல்லாம் மூலமே முதலாளித்துவம் தான் .அதற்கான தீர்வு சோசலிசமே . இங்கே சாதிதான் சமூகமாக இருக்கிறது .இதற்கான பல ஆய்வுகளை அம்பேத்கர் நமக்கு அளித்திருக்கிறார் .மக்களை உழைக்கும் வர்க்கமாக அணிசேர விடாமல் முதலாளித்துவத்தை எதிர்த்து போராடவிடாமல் அதுதான் நம்மை தடுக்கிறது .

அந்த சாதியை இங்கு இருத்தி வைப்பதே இந்து மதம் தான் .இந்து மதம் என்றாலே சாதிய வர்ணாசிரம கட்டமைப்பு தானே . மூவாயிரம் ஆண்டுகளாக இந்த சமூகத்தை சுயலாபத்திற்காக பிரித்து வைத்து நம்மை அடிமை படுத்திய பார்ப்பன கூட்டத்திடம் நாமே சென்று இன்று அடிமை பத்திரம் வாசித்திருப்பதன் விளைவுதானே பாஜக ஆட்சி . அதை அரியணை ஏற்றியது அந்த இந்து மத வெறியும் சாதி ரீதியான ஆதிக்க திமிரும்தானே

இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் தத்துவ போராட்டம் இல்லாமல் அரசியல் போராட்டம் சாத்தியமில்லை என்று

கம்யூனிஸம் பற்றி பேசினால் போதாதா அடுத்தவர்களை குறைசொல்வதால் என்ன பயன் ?

கம்யூனிஸம் வெல்லும் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் முதலாளித்துவம் கொள்ளும் என்பதையும் சேர்த்தே தான் சொல்ல வேண்டும் .  அதற்கு எதிர்ப்பு அரசியல் மிக மிக அத்தியாவசியம்.சமூக குறையை பேசியதால் தானே மார்க்சியமே நமக்கு கிடைத்தது..

0 comments:

Post a Comment