Latest News

எது பிரிவினை வாதம் ? எது தேச விரோதம் ?

"பாரத் மாதா கீ ஜே" என்பது என்னுடைய மொழியும் அல்ல
பாரதம் என்பது என்னுடைய நாடும் அல்ல

இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு .இந்திய அரசியலமைப்பு சட்டமே இப்படித்தான் சொல்கிறது " india is an union of sate " மாகாணங்களின் கூட்டு தான் இந்தியா

தமிழர்களின் மதமும் இந்தியர்களின் மதமும் ஒன்றல்ல

தமிழர்களுக்கு சாதியே கிடையாது ஆரியர்களுக்கு ஜாதி உண்டு . கணவன் இறந்த பின் மனைவியை உடன்கட்டை ஏற்றுவது ஆரிய வழக்கம் . கணவன் இறந்த பின் மனைவிக்கு மொட்டையடிப்பது ஆரிய வழக்கம் .அதில் கூட ஏகப்பட்ட பிரிவு . தமிழனின் உணவும் ஆரியனின் உணவும் கூட ஒன்றல்ல

இப்போது சொல்லுங்கள் எது பிரிவினைவாதம் . வெவ்வேறு கலாச்சாரம் கொண்ட இந்தியாவை ஒற்றை பார்ப்பன கலாச்சாரமாக மாற்ற நினைப்பது பிரிவினைவாதமா ?

அல்லது

அவரவர் கலாச்சாரங்களை பண்பாட்டை பறிக்காதே என்று கோருவது பிரிவினைவாதமா ?

தேசம் என்பது என்ன
தேசப்பற்று என்பது என்ன

இப்படி எந்த ஒரு கேள்விக்கும் அடிப்படை அறிவும் வரலாற்று அறிவும் துளி கூட இல்லாத ஒரு கூமுட்டை கூட்டம் தான் மத்தவங்கள எல்லாம் தேச விரோதின்னு கூவோ கூவோனு கூவுதுங்க...

சரி வரலாற்று ரீதியில் இந்தியா என்பது ஒரு  நாடுதானா என்பதையும் பார்த்து விடுவோம்

தமிழ்நாடே கூட முன்பு சேர நாடு சோழநாடு பாண்டிய நாடு என்று தான் இருந்தது . ஆனால் மொழியாலும் கலாச்சாரத்தாலும் பண்பாட்டாலும் நாம் இணைந்தே இருந்தோம். டெல்லியில் இருப்பவனுக்கும் நமக்கும் இப்படி   ஒன்றுபட்ட தன்மை என்ன இருக்கிறது .

18 ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் காலனி பிடிக்கும் ஆசையில் இங்கிலாந்தும் பிரான்சும் தான் இந்த புவி அரசியலை தோற்றுவிக்கிறது . வரலாற்றில் இந்தியா என்ற நாடு முன் எப்போதும் இருந்ததுமில்லை இனி இருக்கப்போவதுமில்லை .இந்தியா என்ற நிலப்பரப்பை உருவாக்கியதே ஆங்கிலேயன் தான் .அவன் ஆட்சி செய்து விட்டுபோன பகுதிகளை தன்னுடைய ராணுவத்தை கொண்டு ஒடுக்கி வல்லபாய் படேல் என்பவனால் உருவாக்கப்பட்டது தான் இன்றைய இந்தியா .

பிரிவினை பேசினால் தேர்தலில் நிற்க முடியாது என்ற சட்டத்தால் சமீபத்தில் கைவிடப்பட்ட கொள்கைதான் தனிதமிழ்நாடு கொள்கை . இப்போதும் சில தலைவர்களிடம் அது இருக்கிறது . இது தான் நம் மண்ணின் வரலாறு .

இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை .ஆனால் அது உருவான வரலாற்றை மறைத்து இன்றைய அரசின் ஆட்சியாளர்கள் பாரத் மாதா கி சொல்லாவிட்டால் வெளியேறு என்பதை எப்படி ஏற்க முடியும் .நம் மண்ணில் நக்கி பிழைக்க வந்த ஒரு நாதாரி கூட்டம் நம்மை வெளியேற சொல்வதா.  இந்தியா என்பதை தூக்கி பிடித்தால் அதை உடைப்பது தான் நம் தன்மானம் .

உடைப்பது என்றால் தட்டையாக மக்களை பிரிப்பது அல்ல . ஒற்றை தேசம் ஒற்றை கலாச்சாரம் என்ற கருத்தாக்கத்தை உடைப்பது . இந்தியா மாதிரியான பெரிய சந்தையும் கூட்டிக் கொடுக்கும் ஆட்சியாளர்களும் உலக முதலாளிகளுக்கு வேறு எங்குமே கிடைத்திடாது . இப்படி ஒரு சந்தை சிதறி கிடப்பதையோ வேறு சித்தாந்தத்தை ஏற்பதையோ கார்ப்பரேட்டுகள் கனவிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . அவர்களின் கூட்டுக்கான அடிமை சேவைதான் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒற்றை இந்தியா . மூனு சதவீத பார்ப்பனர்களுக்காகவும் உலக முதலாளிகளுக்காகவும் முப்பதுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களை ஒடுக்கி உருவாக்கப் பட்டது தான் இன்றைய இந்தியா

அவன் தேசியம் பேசினால் நாம் தமிழன் என்போம் .தமிழனுக்குள் சாதியம் பேசினால் நாம் மனிதன் என்போம். மனிதமே அனைத்திலும் உயர்ந்தது. இறுதியில் உழைக்கும் மனிதனாக ஒன்றிணைவோம்...

0 comments:

Post a Comment