Latest News

இந்து மதத்தை அதிகமாக எதிர்ப்பதன் மூலம் கம்யூனிஸ்ட்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களா

ஆமாம் இந்தியாவுல இந்து மதத்துல இருந்து மதம் மாத்துறோம் சவுதியில இஸ்லாத்துல இருந்து மதம் மாத்தறோம் . ஐரோப்பாவுல கிறிஸ்தவ மதத்துல இருந்து மதம் மாத்தறோம்...

ஒரு கிறிஸ்தவன விட ஒரு இஸ்லாமியன விட  தன்ன இந்துன்னு சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிற ஒருத்தன் கூமுட்டையாத்தான் இருப்பான் ..

ஒரு கிறிஸ்தவனோ ஒரு இஸ்லாமியனோ கடவுள் யாரென்று கேட்டால் பட்டென பதில் சொல்லி விடுவான்

அதே போல கடவுள் என்றால் என்ன என்று கேட்டாலும் அறிவு பூர்வமாக இல்லாவிட்டாலும் உடனடியாக சொல்லக்கூடிய ஒரு பதில்  அவனிடம் இருக்கிறது . 

ஆனால் ஒரு இந்து கிட்ட கடவுள்னா யாரு கேட்டுப் பாருங்க ? கடவுள்னா என்னன்னு கேட்டுப் பாருங்க பதில் சொல்ல தெரியாது .இங்க இருப்பதெல்லாம் அடிமை தனமான பொதுப்புத்தி மட்டும் தான் ..

ஒரு கம்யூனிஸ்ட் எப்போதும் தன்னை பொதுப்புத்திக்குள் இருத்திக் கொள்பவனல்ல அவன் பொதுப்புத்தியை தாண்டி சிந்திப்பவன் .

இங்கு முதலாளித்துவத்திற்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையே ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது . சமூக விதிகளை படித்து அதன் மூலம் உழைக்கும் மக்களை பிரித்து வைத்து அவர்களை எப்படி சுரண்டுவது என்று பார்க்கிறது முதலாளித்துவம்  அதே சமூக விதிகளை படித்து முதலாளித்துவத்திடமிருந்து மக்களை மீட்டு உழைக்கும் மக்களுக்கான சமூகமாக அதை மாற்ற நினைக்கிறது கம்யூனிஸம் .

முதலாளி வர்க்கத்திற்கும் தெரியும் இடையில் இருப்பவன் ஆட்டு மந்தை தான் என்று . ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் மட்டுமே அந்த மக்களின் வாழ்நிலையை கணக்கிலெடுத்து அவர்களை அணுகுகிறான். உங்களுடைய வார்த்தைப்படியே சுயநலவாதிகளின் மதமாற்ற அவதூறுகளில் சுயநலம் தானே இருக்கிறது . பின் அதில் எப்படி உண்மை இருக்க முடியும்

இதற்கு இடையில் இருக்கும் பல முட்டுக்கட்டைகளில் ஒன்றுதான் இந்த மதங்கள். மதத்தை தாண்டியும் ஏராளமான தடைகள் உள்ளது . ஆனால் அங்கெல்லாம் சமூகம் ஆய்வு பூர்வமாக எல்லா வற்றையும் அணுகுகிறது . இங்கு மட்டும் தான் அடுத்தவனின் திட்டப்படி சமூகம் இயங்குகிறது...

0 comments:

Post a Comment