Latest News

சாதி சான்றிதழ் இருப்பதால் தான் சாதி இருக்கிறது ???????

இதுக்கு பல முறை விளக்கம் குடுத்தாலும் மீண்டும் மீண்டும் இந்த பார்வை மங்கவே இல்லை

இவர்களுக்கு ஒரு கேள்வி
அதே சாதி சன்றிதழில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்னு ஒன்னு போடுறாங்களே அது எதுக்குன்னு தெரியுமா..?

நம்மல அப்படி பிற்படுத்தி வச்சவங்க யாருன்னு தெரியுமா ?

இந்தியாவுல வெறும் 3 சதவீதம் மட்டுமே இருக்குற பார்ப்பனர்கள் ( இந்த பிஜேபி கட்சிய உருவாக்குனவங்க) தான் நம்மல மூவாயிரம் வருசமா இங்க அடிமையா வச்சிருந்தானுங்க இது தான் வரலாறு

வெள்ளக்காரன் ஆட்சியில அரசாங்க வேலைகள் உருவாக்கப்பட்டது .இதுல முழுக்க முழுக்க பார்ப்பான் மட்டும்தான் இருந்தான் .அப்போ அவன் சொல்றதுதான் சட்டமா இருந்தது .இத மாத்தனும்னா என்ன பன்றதுன்னு யோசிச்சி பெரியார் தான் முதன்முதலில் அதுவும் தமிழ்நாட்டில் தான் பிராமணர்கள தவிர மத்தவங்களும் அரசு அதிகாரத்துக்கு வரணும்னு குரல் குடுத்தாரு .

ஆனா அதுக்கு கல்வி அறிவு வேணுமே . நாமெல்லாம் பள்ளி கூடம் போகக் கூடாதுன்னு ஏற்கனவே பார்ப்பான் சட்டம் போட்டு வச்சிருக்கானே . அப்போ படிக்கிறதுக்கும் அரசு வேலைக்கும் இந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்த சேர்ந்த மக்கள் வரனும்னா அவங்களுக்கு பிரதிநிதித்துவம் குடுக்கனும்னா பிற்படுத்த பட்டவன் யாருன்னு தெரியனும்ல.

அதுக்கான கணக்கெடுப்புக்குத்தான் இந்த சான்றிதழில் சாதி பெயர் குறிக்கப்படுகிறது...

ஆனா நாம என்ன பண்றோம் !

மூவாயிரம் வருசமா நம்மல பிற்படுத்தி வச்சிருந்தானோ அவன் கட்சியிலயே போயி அவன் பேச நினைக்கிறது நாம வாயால பேச வைக்கிறான். நாமலும் அப்படி தான் பேசறோம் ...

முதல்ல நம்மல பிற்படுத்துனது யாருன்னு  கேள்வி கேட்டு பழகுங்க அடிமை புத்திகளா .....

0 comments:

Post a Comment