எவ்வளவு அலசினாலும் கறை போகவே இல்ல ஆடை அரசியல்
இந்துத்துவா வாதிகள் எப்படி இந்தியாவில் ஒற்றை கலாச்சாரத்தை திணிக்க பார்க்கிறார்களோ அது போல இஸ்லாம் உலகம் முழுவதும் ஒற்றை கலாச்சாரத்தை தினிக்க விரும்புகிறது. அது தான் பர்தா . அது பல்வேறு சமூகம் பல்வேறு கலாச்சாரம் இருப்பதை ஏற்றுக் கொள்வதே இல்லை..
முதலில் இவர்களுடைய வாத நியாயங்கள் நிர்வாணமாக செல்வது தவறு என்பதிலிருந்து பிறக்கிறதா அல்லது பர்தா அணியாமல் செல்வது தவறு என்பதிலிருந்து பிறக்கிறதா என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . இவர்களை பொருத்த வரை பர்தா அல்லாத எல்லாமே நிர்வாணம் தான்.
ஆடை சுதந்திரம் பற்றி பேசும் போதெலலாம் சமூக பொறுப்பை பற்றி வகுப்பெடுக்க வந்து விடுகிறார்கள் .
எல்லா சுதந்திரத்திற்கும் சமூக பொறுப்பு உள்ளது . அதே நேரத்தில் நம்முடைய சமூக வாடையே இல்லாத ஏன் ஆடையே இல்லாத சுதந்திரமான வேறொரு சமூகமும் உள்ளது என்பதை உணர்வது இல்லை. அங்கெல்லாம் கூட ஆபாசம் என்பது ஆடையில் இருப்பதில்லை என்பதையும் அறிய முயற்சிப்பதே இல்லை. ஒவ்வொரு தனிமனித பொறுப்புகளையும் அந்தந்த சமூகம் வரையறை செய்தே வைத்துள்ளது . தமிழ்நாடு மாதிரியான ஒரு சமூகத்தில் நிர்வாணமாக செல்வது சமூக பொறுப்பிலிருந்து விலகுவதுதான். ஆனால் நிர்வாணமாக சென்றால் அத்து மீறுவேன் என்பவர்களுக்கான எதிர்வாதம் தான் பண்பட்ட சமூகத்தின் ஆடை உரிமை பற்றி பேச விளைகிறது . பண்பட்ட சமூக மாற்றத்தை விரும்புவதிலிருந்து வருகிற பக்குவபட்ட குரலாக தான் அதை பார்க்க முடிகிறது...
அதே நேரத்தில் நிர்வாணமா? ஆடையா? என்பதை அந்த சமூகமே சுதந்திரமாக முடிவு செய்து கொள்ளட்டும் என்கிறேன் .
இதில் குழப்பமடைய ஒரு வாய்ப்பு உள்ளதால் அதை தெளிவு படுத்தி விடுகிறேன் .
நிர்வாணத்தை தேர்ந்தெடுப்பது பண்பட்ட சமூகம் என்பதற்கும் பண்பட்ட சமூகத்திற்கு நிர்வாணத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும் உள்ளது என்பதற்கும் வேறுபாடு உண்டு.
அது சரி என்பதற்கும் தவறில்லை என்பதற்குமான வேறுபாடு .
இறுதியில் பர்தா பாதுகாப்பானது என்பதெல்லாம் சட்டினி கூட நம்பாத இட்டிலி கதைதான்
பர்தா அணியாத பாலியல் சீண்டலே நடக்காத சமூகம் தான் இங்கு அதிகம் . இவர்களுடைய நிலை என்பது பெண்ணின் பாதுகாப்போடு தொடர்புடையதாக இருந்திருந்தால் தண்டனையை அவர்களுக்கு கொடுத்திருக்க மாட்டார்கள் .எங்கள் வேதம் சொல்லி விட்டது என்பதால் எடுக்கப்பட்ட முன்முடிவை தாண்டி அதை காக்க வேண்டிய கட்டாயத்தை தாண்டி எந்த தர்க்க நியாமும் தெரியவில்லை இவர்கள் வாதத்தில்..
இந்தியாவை எடுத்து கொள்ளுங்கள் இங்க ஏற்கனவே இந்துத்துவா வாதிகள் இஸ்லாமியர்கள் மேல ஏகப்பட்ட விஷமத்த பரப்பிவிட்டு ஒருவித விரோத உணர்வை வளர்த்து விட்டுள்ளார்கள் .
சமூகம் இப்படி இருக்க "இன்னும் எங்களுக்கு உரிமை இல்ல .நாங்க தலித்த விட பின்தங்கி இருக்கோம் எங்ளுக்கு வீடு கிடைக்கல .எங்களுக்கு இட ஒதுக்கீடு வேணும் .இப்படி எல்லாம் நீங்க கேக்குறது ஆதிக்க சக்திகளின் கோவத்தை இயற்கையாக தூண்டிவிடாதா ? ". இந்துத்துவா வாதிகளுக்கு இஸ்லாமியர்கள் கட்டுப்பட்டு நடக்கனும்ங்கிறது இறைவனோட சோதனையில ஒன்னு . இப்படிலாம் சொல்றத நீங்க ஏத்துக்கிட்டா மட்டும் தான் ஆடை சார்ந்த உங்களோட பார்வை உங்களுக்கே நியாயமான தாக இருக்க முடியும்..
இங்க மட்டும் ஆதிக்க மனோநிலையை பற்றி எங்களுக்கு கவலை இல்ல .எங்கள் உரிமையில் தலையிட அவன் யார் .எந்த கடவுள் அவன்கிட்ட இப்படி எழுதி கொடுத்தான் ஆதாரம் எங்கன்னு நீங்க எதிர் கேள்வி கேட்டீங்கன்ன அது தான் ஆடை விசயத்திலும் உங்களுக்கான என்னுடைய பதில்...
0 comments:
Post a Comment